கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரில், “இரவு 10:30 மணிக்கு மேல் இருவர் பள்ளிவாசல் உள்ளே நுழைந்து ஜெய் ஶ்ரீ ராம் எனக் கூச்சலிட்டும், அச்சுறுத்தும் வகையில் மிரட்டிச் சென்றனர். இதனால், பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களுக்கும், அந்தப் பகுதியில் வசித்தவர்களுக்கும் பதற்றமான சூழல் உருவானது. தற்போதுவரை பள்ளிவாசல் இருக்கும் பகுதிகளில் மதவேற்றுமை இன்றி இரண்டு சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தவறான நோக்கத்துடன் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை, அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 447 (குற்றவியல் அத்துமீறல்), 505 (பொது அமைதியைக் கெடுக்க வழிவகுக்கும் அறிக்கைகள்), 506 (குற்றவியல் மிரட்டல்), 34, 295 ஏ (மத உணர்வுகளைச் சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் வேண்டுமென்றே அவமதிப்பதற்காகப் பதியப்படுவது. ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று புரியவில்லை. அந்த பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாகப் புகார் தாரரே தெரிவித்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்க முடியாது.
மேலும், 295ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அமைதியைக் கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கைச் சீர்குலைப்பதிலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் 295A பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளைக் கண்டறியாமல், மனுதாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது துஷ்பிரயோகம் மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs