சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில், “கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் நண்பராகப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 08.10.2024 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்குச் சென்று வரலாம் என்று அழைத்தார். அதற்கு நான் வீட்டிற்குத் தெரிந்தால் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று கூறி அதனைத் தவிர்த்தேன். இருந்தாலும் அவர் எனது பெற்றோருக்குத் தெரியாமல் சென்று வரலாம் என்று தொடர்ந்து கூறியதன் பேரில், நான் அவருடன் கொல்லிமலைக்குச் செல்ல சம்மதித்தேன்.
அதன் மூலம் நானும் எனது நண்பரும், அவருடைய இரண்டு நண்பர்கள் என நான்கு பேரும் இரண்டு பைக்களில் கொல்லி மலைக்குச் சென்றோம். அங்குச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்காக, டிரஸ் சேஞ்ச் செய்வதற்காக ஒரு தனியார் ஓட்டலில் அரை எடுத்து இருந்தோம். அப்போது எனது நண்பர் குளிர்பானம் குடிக்கக் கொடுத்தார். நானும் அதை வாங்கி குடித்தேன். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என்னை எனது நண்பர், அவருடைய நண்பர்கள் இருவரும் என மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து பாலியல் அத்துமீறல் செய்தது தெரிய வந்தது.
மேலும் இது தொடர்பாக வீட்டில் நான் சொன்னால் இதனை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி வந்தனர்.” என்று அப்புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று 15.10.2024 சம்பந்தப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிறுமியின் பெற்றோர்கள் விசாரித்ததில் நடந்ததை எல்லாம் தெரிவித்துள்ளார். அதன் மூலம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொல்லிமலையில் சிறுமி தங்கி இருந்த தனியார் விடுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனரா என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிறுமி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY