சென்னை: ‘இந்த’ மெட்ரோக்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!
இன்று (அக்டோபர் 15) முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை, கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை: கோயம்பேடு நூறடி சாலையில் போக்குவரத்து மாற்றம்!
மழை நீர் தேக்கத்தால் அரும்பாக்கம் நூறடி சாலையில் போக்குவரத்து மாற்றம். வாகன நெரிசல் அதிகரித்ததால் ஒரு வழி பாதையில் இருவழி போக்குவரத்து அனுமதி.
சென்னை கன மழை லைவ் ரிப்போர்ட்டிங்!
புதுச்சேரி: கன மழை எச்சரிக்கை துறைமுகத்தில் படகுகள் நிறுத்திவைப்பு!
கோவையில், பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
இடம் – கதிரவன் கார்டன், கள்ளிமடை
வேளச்சேரியில் பருவமழை முன்னெச்சரிக்கை மையம் அமைப்பு!
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, “நாளை (அக்டோபர் 16) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட். புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்”.
சென்னை காவல் துறை அவசர கால தொலைபேசி எண்கள் வெளியீடு!
“சென்னை போலீஸ் பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், மக்களுக்கு உதவவும் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பிற்காக 12 கன்ட்ரோல் ரூம்களும், 35 சிறப்பு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளது.
அவசர கால போலீஸ் எண்: 100
சென்னை மாநகர் டிராபிக் போலீஸ் வாட்ஸ் ஆப் எண்: 9003130103
தீயணைப்பு துறை எண்: 101
சென்னை மாநகராட்சி எண்: 1913
தமிழ்நாடு மின்சார வாரிய எண்: 9498794987
பாம்புகளை பிடிக்க வனத்துறை எண்: 04422200335
சாய்ந்த அல்லது விழுந்த மரங்களை அப்புறப்படுத்த எண்: 18005712069″ என்று முக்கிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி காவல் துறை வெளியிட்டுள்ளது.
மின் தடை ஏற்பட்டால் இந்த எண்ணிற்கு அழைக்கவும்!
தமிழ்நாடு மின்சார துறை பொதுமக்களுக்கு, “தாழ்வாக தொங்கும் மின்சார வயர்களை தொடவும், அருகில் செல்லவும் வேண்டாம். மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். உங்கள் பகுதியில் மின் தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் – 94458 50889
மணலி – 94458 50871
மாதவரம் – 94458 50344
ஆலந்தூர் – 94458 50179
தண்டையார்பேட்டை – 94458 50900
ராயபுரம் – 94458 50686
திரு.வி.க., நகர் – 94458 50909
அம்பத்தூர் – 94458 50311
அண்ணாநகர் – 94458 50286
தேனாம்பேட்டை – 94458 50717
கோடம்பாக்கம் – 94458 50727
வளசரவாக்கம் – 94458 50202
அடையாறு – 94458 50555
பெருங்குடி – 95006 59827
சோழிங்கநல்லூர் – 94458 50164
மேற்கண்ட எண்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
சென்னை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை.
கோவையில் மட்டும் அரைநாள் (இன்று காலை மட்டும்) வரை பள்ளிகள் இயங்கும்.
மதுரை: இயற்கை பேரிடர் உதவி எண்கள் வெளியீடு!
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை!
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், “தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இது இந்திய பகுதிகளில் இருந்து அடுத்து 3 நாள்களில் விலகக்கூடும். இன்று, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முழுவதும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம். இந்த மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் அதி கன மழையும் பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.