“மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயிலில் உள்ள பெருமாள் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி உள்ளிட்ட சன்னிதிகளில் அவர் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன்,
“திருவள்ளூர் ரயில் விபத்து, திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் விபத்து குறித்து அரசியல் செய்யக்கூடாது.

ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து சிறு விபத்து. கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. எனவே, இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.