சென்னை: கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த மோதல் – தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு – 5 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் கடந்த 4-ம் தேதி மாநில கல்லூரி மாணவர் சுந்தர் (19) என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கொடூரமாக தாக்கி விட்டு தப்பினர். ரூட் தல விவகாரத்தில் இந்த மோதல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இதில் முதலாம் ஆண்டு பயிலும் சுந்தர், கடந்த நான்காம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இன்று காலை சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரியமேடு போலீஸார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை பெரியமேடு போலீஸார் ஏற்கனவே கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீஸார் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88