`ஆங்கிலேயர் காலம் மாதிரி வரி போடுகிறார்கள்..!’ – திமுக மீது வேலுமணி பாய்ச்சல்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய வேலுமணி, “திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகளாகியும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

வேலுமணி

எடப்பாடி அற்புதமான ஆட்சி நடத்தினார். கோவையின் வளர்ச்சிக்கு எடப்பாடி தான் காரணம். கேட்ட திட்டங்கள் அனைத்தையும் அள்ளி கொடுத்தவர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கப்படும் அளவுக்கான வரி தற்போது விதிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் கட்டணத்தால் தொழில் முடங்கிவிட்டது. அதிமுக-வின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை.

கோவை

கோவைக்கு இத்தனை மேம்பாலங்கள் வர காரணம் எடப்பாடி பழனிசாமி தான். ராகுல் காந்தியா, மோடியா என்று பார்த்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்தினர்.

சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சி இன்னும் ஒரு வருடத்துக்கு தான். எதையும் செய்யாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. எங்கும் போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.

அதிமுக

கேவலமாக ஆட்சி புரிகின்றனர். வருங்காலமே அழிந்து கொண்டிருக்கிறது.  சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விமான சாகச நிகழ்ச்சி  என்றால் மக்கள் அதிகளவில் ஆர்வமாக வருவார்கள்.

கூடுதலாக பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு, கூடுதலான நிவாரண நிதி வழங்க வேண்டும். ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளுக்கு  பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதேபோல மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கும், உரிய பாதுகாப்பு, பேருந்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs