Chennai Air Show: “சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்” – கனிமொழி எம்.பி.,

இந்திய விமானப்படைத் தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், வெயிலின் கொடுமையால் ஏறத்தாழ 250 பார்வையாளர்கள் மயக்கமடைந்தனர். கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகச் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாகச் செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

அரசு சார்பில் ஆங்காங்கே அவசர சிகிச்சை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டதால் மருத்துவ வசதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டன.

இந்த நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தி.மு.க., தலைமையிலான மாநில அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

Chennai Air Show

மேலும், தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மாநில அரசின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., எம்.பி கனிமொழி, சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs