கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகம் மாற்றம் ஏற்படாமல் கிட்டதட்ட ஒரே மாதிரியாக தொடர்ந்து வருகிறது. ஆனால், தற்போது சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் காரணங்களால் இந்த விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
காரணம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை, உலக அளவில் ஒரு பேரல் (கிட்டதட்ட 159 லிட்டர்) கச்சா எண்ணெய் 71 டாலருக்கு விற்பனை ஆகி வந்தது.
நேற்று முந்தினம் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த இரு நாடுகளின் பொருளாதாரத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு சண்டை நீண்டால் எண்ணெய் தொடர்ந்து கிடைப்பதிலும், அவைகளின் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக, நேற்று முந்தினமே ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 76 -டாலருக்கு அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பிற நாடுகளுக்குமான சண்டை நீண்ட நாட்களாக நடந்துக்கொண்டு வந்தாலும், இதுவரை எண்ணெய் விலையில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாததற்கு முக்கிய காரணங்கள் – சீனா சமீப காலமாக கச்சா எண்ணெயை அதிகம் வாங்காததும், அமெரிக்கா கச்சா எண்ணெய் தயாரிப்பில் இறங்கியதும் என்கிறார்கள் சர்வதேச பொருளாதார ஆலோசகர்கள்.
இனி…
ஈரான் இஸ்ரேலை தாக்கியதையடுத்து, ஈரானின் பொருளாதாரத்தை தாக்க இஸ்ரேல் அதன் ஏற்றுமதி தளத்தை தகர்க்கலாம் என்கிறார்கள். இதனால் ஈரானை எண்ணெய் தேவைக்காக நம்பியிருக்கும் நாடுகள் பெருமளவு பாதிப்படையும். இந்த நாடுகள் எண்ணெய்க்காக மாற்று நாடுகளை தேடும்போது, எண்ணெய் விலை எகிற வாய்ப்புள்ளது.
எண்ணெய் தேவைக்கு இந்தியா பிற நாடுகளைத் தான் சார்ந்துள்ளது. இதனால் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் நிச்சயம் எதிரொலிக்கலாம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரலாம். இந்த விலை உயர்வு வெறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக மட்டும் கடந்து போகாமல், பொருட்களின் விலை, பணவீக்கம் என அனைத்தையும் உயர்த்தும். மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக பணம் செலவளிக்க வேண்டி வரலாம் என்பதால், வேறு சில நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி குறையும் அபாயமும் உள்ளது. இதன் காரணங்களாக, இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.