பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் விசிக மதுப்பு ஒழிப்பு மாநாடு குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
விசிக சார்பில் கடந்த 2 ஆம் தேதி நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். இதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

“திருமாவளவன் நாகரீகமான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதை மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியதன் மூலம் தெரிந்து கொண்டேன். வக்கிரத்தின் அடையாளமாக திருமாவளவன் இருக்கிறார். நான் எங்கேயும் பாட்டில் பற்றியும் பேசவில்லை மூடியை பற்றியும் பேசவில்லை. நான் எப்போதும் மோடியை பற்றி மட்டும்தான் பேசுவேன். அவருடைய சுய பிரபலத்தை பேச என்னைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
தொடர்ந்து விஜய் மாநாடு குறித்து பேசிய அவர், “தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன. உங்கள் கட்சி புதிய கட்சி உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் இருக்கிறது. விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை. கடைசி படம் இதுதான் என்று விஜய் பலமுறை கூறியிருக்கிறார்.

விஜய் அரசியல் வருவதற்கு முன்பாக விஜய் நடிக்க உள்ள படம் கடைசி படமா என்று தெரியவில்லை. மாநாட்டை சிறப்பாக நடத்தி விடுவார்கள். ஆனால் கட்சி நடத்துவது எப்படி என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் போன்று திரை துறையினர் ஏழை எளிய மக்களை ஏமாற்றாதீர்கள். அடிதட்டு மக்களை குறிவைத்து அரசியல் என்ற பெயரில் விஜய் போன்ற திரை துறையினர் ஏமாற்ற வேண்டாம். இளைஞர்கள் வேலைகளை விட்டுவிட்டு மாநாட்டிற்கு வரவேண்டும் என்று புஸி ஆனந்த் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…