Seeman: “கட்சிப் பேரை சொல்லி ரூ.5 கோடி வசூலிச்சிருக்காங்க” – நிர்வாகிகள் விலகியது குறித்து சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி, நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி நாதக நிர்வாகிகள், சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்களின் பொறுப்புகளில் இருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் நாதக நிர்வாகிகள் விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

சீமான்

அதற்கு பதிலளித்த அவர், “கட்சி மீது அதிருப்தியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எப்போதும் இருக்கிறதுதான். திடீரென்று அவர்களுக்கு அதிருப்தி வரும். அவர்களுக்கு திருப்தி இருக்கிற இடங்களுக்கு போய் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். இது ஒரு பெரிய சிக்கலே கிடையாது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய பிரச்னை கிடையாது.

கட்சிப் பேரை சொல்லி ரூ.5 கோடி காசு வசூலிச்சிருக்கிறார்கள். என்னுடைய முகத்திற்காக, காசு கொடுத்தவர்கள் வழக்கு தொடராமல் இருக்கிறார்கள்.

சீமான்

அதை வெளியில் சொன்னால் எனக்குத் தகுதியாக இருக்குமா? ஒரு வளர்ந்து வரும் கட்சிக்குள் சின்ன சின்ன இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக நினைக்கக்கூடாது. இது என்னுடைய கட்சி பிரச்னை, என் பிரச்னை, இதில் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்னை கிடையாது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY