காலையில் பாஜக; மாலையில் காங்கிரஸ்! – ஒரு மணி நேர இடைவேளையில் கட்சி தாவிய முன்னாள் எம்.பி

மக்களவை முன்னாள் உறுப்பினர் அசோக் தன்வார் பாஜக-வில் இருந்து விலகி இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.

ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. ஹரியானாவில் பாஜக – காங்கிரஸ் மோதல் பலமாக இருக்கிறது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் பா.ஜ.க-விற்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் எம்.பி அசோக் தன்வார், 2 மணி அளவில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

அசோக் தன்வார்

ஒரு மணி நேர இடைவேளையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியானாவில் முன்னாள் எம்.பி-யாக இருந்த அஷோக் தன்வார் இப்படி கட்சி மாறுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஜனவரி மாதம் பாஜக-வில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மூன்று கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார். 2014 -20 ஆம் ஆண்டு வரை ஹரியானா காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அசோக் தன்வார் 2021ஆம் ஆண்டு திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அசோக் தன்வார்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க வில் இணைந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88