உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அரசு சுற்றுலா கழகம் சார்பில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதன்ஒரு பகுதியாக மதுரை ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி மற்றும் ரோட்டரி கிலப் ஆப் சங்கமம் சார்பில் தெய்வக் குழந்தைகளுடன் ஒரு சுற்றுலா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி ஆதரவற்ற மாணவ, மாணவிகள் 100 பேரை 3 மினிபஸ்களில் மதுரையில் உள்ள பாரம்பரிய இடங்களாகிய திருமலைநாயக்கர் மகால், காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா ஆகிய பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவர்களுக்கு இலவச உணவு மற்றும் படிப்பிற்குத் தேவையான பொருட்கள் வழங்கி சுற்றுலா தினத்தை கொண்டாடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி நிறுவன இயக்குனர் பழனியப்பன் மற்றும் விஸ்வநாத் பழனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் மதுரை சுற்றுலா அலுவலர் திரு.பாலமுருகன் மற்றும் ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி விழாவில் கலந்துகொண்டு சிறப்பிதனர்.