“மாட்டுக் கோமியம் குடித்தால்தான் அனுமதி” – நவராத்திரி விழாவுக்கு கண்டிஷன் போட்ட பாஜக நிர்வாகி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. மொத்தமாக ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 3 முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் கோமியம் அருந்தினால்தான் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்க வேண்டும் எனப் பா.ஜ.க., நிர்வாகி நிபந்தனை போட்டிருக்கும் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாடுகள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் மாவட்ட பா.ஜ.க., நிர்வாகி சிந்து வர்மா, “பக்தர்களை நிகழ்ச்சியில் நுழைய அனுமதிக்கும் முன், அவர்கள் மாட்டுக் கோமியத்துடன் ஆச்மன் செய்வதை உறுதி செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் கோரினோம். இந்துக்கள் அல்லாத சிலர் ஆதார் அட்டையை எடிட் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடும். இதுவே, இந்துவாக இருந்தால், மாட்டுக் கோமியம் அருந்தி கர்பா பந்தலுக்குள் நுழைவார். இந்துக்கள் யாரும் இதை மறுக்கமாட்டார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆச்மன் என்பது, இந்து மதப் பழக்கவழக்கங்களின்படி, மதச் சடங்குகளைத் தொடங்குவதற்கு முன், ஆன்மா மற்றும் உடலைப் பரிசுத்தம் செய்வதற்கான மந்திரங்களை உச்சரிக்கும்போது தண்ணீர் எடுத்துக்கொள்ளும் வழக்கமாகும்.

இவ்வாறிருக்க, மாட்டுக் கோமியம் குடித்தால்தான் நிகழ்ச்சியில் அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க., நிர்வாகி கூறியிருப்பது காங்கிரஸிடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.

பாஜக – காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா, “பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து மௌனம் காக்கும் பா.ஜ.க., தலைவர்கள், இதுபோன்ற விஷயங்களை அரசியலாக்குவதில் மும்முரமாக இருக்கின்றனர். அவலநிலை குறித்த பிரச்னைகளைத் திசைதிருப்ப அரசியல் செய்யும் பா.ஜ.க-வின் புதிய தந்திரம் இது.” என்று சாடியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY