MUDA: “எனக்கு செல்வம், நிலம் என எதுவும் வேண்டாம்..” – சித்தாராமையாவின் மனைவி கடிதம்!

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சித்தராமையா மீதான புகாரை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதியளித்தார்.

சித்தராமையா

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, சித்தராமையா தாக்கல் செய்த மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து,“சித்தராமையா மீதான புகாரை மைசூர் லோக் ஆயுக்தா காவல்துறை விசாரித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி MUDA அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில், “எனக்கு செல்வம், நிலம் என எதுவும் வேண்டாம். எனது குடும்பத்தின் கண்ணியம்தான் மிகவும் முக்கியமானது. கேசர் கிராமத்தின் நிலத்துக்கு இழப்பிடாக, MUDA மைசூரு பகுதியில் எனக்கு ஒதுக்கிய 38,284 சதுர அடி, 14 இடங்களை திரும்பவும் ஒப்படைக்கிறேன். இந்த முடிவு குறித்து, என் கணவர், மகன் உள்ளிட்ட என் எந்த குடும்ப உறுப்பினார்களிடமும் ஆலோசிக்கவில்லை. இது என் தன்னிச்சையான முடிவு.

சித்தராமையா

இந்த இடங்கள் என் கணவர் மீதும், அவர் அரசியல் மீதும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சிக்கலை உருவாக்கவும் என் சகோதரனால் வழங்கப்பட்டிருக்கிறது. என் கணவரின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுபோல எந்த அவப்பெயரையும் அவர் சந்தித்ததில்லை. நேர்மையாக வழிநடத்தப்பட வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…