Tirupati: `கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்’ – சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்தர்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சந்திரபாபு நாயுடு,ஜெகன் மோகன் ரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பரிகாரமும் செய்யப்பட்டது. லட்டு விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும்.

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

விலங்கு கொழுப்பு கலந்த கலப்பட நெய் தான் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான தரவுகளும் இல்லை. முழுமையாக அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட்ட காரணம் என்ன? கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்” என்று ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…