தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவைக்கு நாளை 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராஜேந்திரன் மூவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிகக்கப்பட்டிருக்கின்றனர். கோவி செழியன், செந்தில் பாலாஜி, எஸ்.எம்.நாசர் , ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய மாற்றங்களும் நடக்கிறது. 6 அமைச்சர்கள் துறை மாற்றம் செய்யப்பட்டிருக்கி்றது. புதிய பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சிவ.வி மெய்யநாதன். பொன்முடி – வனத்துறை மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜ கண்ணப்பன் – பால்வளத்துறை காதி மற்றும் கிராம, கயல்விழி செல்வராஜ் – மனித வள மேம்பாடு, தங்கம் தென்னரசு – நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்.