“ஜெலன்ஸ்கி – புதின் இருவரிடமும் நட்பு உண்டு… அதிபரானால் போரை நிறுத்துவேன்” – டிரம்ப்

எதிர் எதிராக பேசி வந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி நேற்று நியூயார்கில் சந்தித்து பேசியுள்ளனர். பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் டிரம்ப ஜெலன்ஸ்கியே சாடி பேசிக்கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு முன்னர், ஜெலன்ஸ்கி நியூயார்க்கில் கொடுத்த பேட்டி ஒன்றில் டிரம்பிற்கு ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அவசியம் பற்றி தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், திடீரென இருவரின் சந்திப்பும் நிகழந்தது. இந்த சந்திப்பின் தொடக்கத்தில் டிரம்ப் கூறியதாவது, “வரலாற்றிலேயே யாரும் சந்தித்திராத அளவிற்கு, இவர் நிறைய விஷயங்களை சமீபத்தில் சந்தித்துள்ளார். இந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் போரை நிறுத்துவது சம்பந்தமாக இருத்தரப்பிலும் முயற்சி எடுப்பேன்.

ஜெலன்ஸ்கி – ட்ரம்ப் நியூயார்கில் சந்திப்பு

கட்டாயமாக இந்த போர் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன் மற்றும் பிற நாடுகளும் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இவரிடமும், புதினுடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நான் வெற்றிப்பெற்றால், போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பேன். மேலும் வெற்றிப்பெற்றால், அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னரே, இதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று பேசினார்.

ஜெலன்ஸ்கி பேசும்போது, “ஐந்து வருடங்களுக்கு பிறகு, நாம் இப்போது சந்திக்கிறோம். எனக்கு டிரம்பிடம் உக்ரைன் குறித்து பேச வேண்டியது இருக்கிறது. உக்ரைனில் நடந்துவரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரே எண்ணம் நம் இருவருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தப் போரில் நிச்சயம் புதின் வெற்றிப் பெறக் கூடாது. அதற்கு உக்ரைன் மக்கள் தயாராக இருக்க வேண்டும். இது சம்மந்தமான எங்களது திட்டங்களை உங்களிடம் எனக்கு பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி

நவம்பருக்கு பிறகு அமெரிக்க அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவில்லை. அதுவரையில் புதினை தடுக்க முடியாது. அதனால் எங்கள் வீரர்கள் போர்களத்தை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் நவம்பருக்கு பிறகு, அமெரிக்கா பலமாக எங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். அதனால் தான் அதிபர் வேட்பாளர்கள் இருவரையும் சந்தித்து பேசியுள்ளேன்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…