TVK: ‘அடுத்த வாரம் பூமி பூஜை; மாநாட்டுப் பணிக்கு 5,000 பேர்’ – தவெக மாநாடு குறித்து ஆனந்த் தகவல்

அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு த.வெ.க., மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்தின் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. மாநாடு ஏற்பாடுகளைச் செய்வதற்கான குழுக்கள் அமைப்பது, அவற்றுக்கான பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வது, பணிகளை எவ்வாறு பார்த்துக் கொள்வது, மக்களை மாநாட்டிற்கு அழைத்து வர நியமிக்கப்பட்ட இரண்டு பெண் நிர்வாகிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு எவ்வாறு மக்களை அழைத்து வர வேண்டும் போன்றவற்றை ஆலோசித்ததாகக் கூறப்பட்டது.

விஜய் | ஆனந்த்

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆனந்த், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மாநாடு குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். “விக்கிரவாண்டியில் நடைபெறப்போகும் முதல் த.வெ.க., மாநாட்டிற்கான பூமி பூஜை அடுத்த வாரம் போடப்படும். மாநாட்டுக்கு 25 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மாநாட்டில் பணி செய்ய 5,000 பேர் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 150 பேருக்கு மாநாட்டில் பணி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மாநாட்டிற்கு வரும்போது பாதுகாப்புடன் வரவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகளுக்குத் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட இருக்கின்றன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களும் மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு கட்சிக்கும் தலைவர் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாமல் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு என்ன தேவைகள் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

ஆனந்த்

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பல நலத்திட்டங்களைச் செய்திருக்கிறோம். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக இருக்கும். நம் உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தளபதிதான். இந்த எழுச்சி 2026 வரை கண்டிப்பாக இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி என்ன சொல்கிறாரோ அதைச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. மாநாட்டை மிகச்சிறப்பாகச் செய்து காட்ட வேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…