“11 நாய் இனங்கள் வளர்க்க தடை” தமிழக அரசின் விதிமுறைகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் பேரில், ‘தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை 2024’-ஐ கால்நடை பரமாரிப்புத் துறை நேற்று வெளியிடப்பட்டது. அதில்,

“ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை ஆகிய நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் ஆகும்.

கட்டை, ராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி நாய், செங்கோட்டை நாய் ஆகிய நாய் இனங்கள் அழிந்துவிடாமல் காக்க அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். மேலும், இந்த நாய் இனங்களின் இனப்பெருக்கத்திற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.

பெரிய ‘நோ’

வணிக ரீதியாக நாய் வளர்ப்போர்கள் செல்லப்பிராணிகள் லைசன்ஸும், இனப்பெருக்கத்திற்கான லைசன்ஸ்களையும் பெற வேண்டும். மேலும் குறிப்பிட்ட இன நாய்களை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய வேண்டும். செல்லப்பிராணி கடை வைத்திருப்போர் தமிழ்நாடு கால்நடை நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களிடம் இருந்து மட்டுமே நாய்க்குட்டிகளை வாங்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள்:

இந்தியாவின் தட்ப வெப்பநிலையை தாங்க முடியாத

  1. செட் ஹவுண்ட்

  2. பிரெஞ்சு புல்டாக்

  3. அலாஸ்கன் மலாமுட்

  4. செளசௌ

  5. கீஷோண்ட்

  6. நியூபவுண்டிலாட்

  7. நார்வே எல்கவுண்ட்

  8. திபெத்திய மாஸ்டிப்

  9. சைபீரியன் ஹஸ்கி

  10. செயின்ட் பெர்னார்ட்

  11. பக்

ஆகிய 11 இன நாய்களை தமிழ்நாட்டில் வளர்க்க தடை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் இந்த அறிக்கையில் நாய்களின் இனப்பெருக்கம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பதிவு, உரிமம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் https://www.tn.gov.in/– என்ற அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.