“உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் எந்த வாய்ப்பு வழங்கினாலும் அதனை சிறப்பாக செய்து சாதித்து காட்டுவார்…” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டார்.
விழா நிறைவுக்கு பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகம் முழுவதும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியினை கடந்த 10-ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் வழங்கப்பட்ட பொறுப்பிலும், அமைச்சர் பொறுப்பிலும் தனது துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு எதிர்காலத்தில் எந்த வாய்ப்பு வழங்கினாலும் அதனை சிறப்பாக செய்து சாதித்து காட்டுவார்.” என்றவரிடம்,
“பிணையில் வந்திருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராவாரா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டில் பிணையில் வந்திருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சருக்கு பொறுப்பு வழங்க நான் சிபாரிசு செய்ய முடியாது. இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்க கூடாது, முதல்வர்தான் முடிவெடுப்பார். முதல்வர் எடுக்கும் முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…