தஞ்சை: பிரபல ரெளடி அறிக்கி வெட்டிக் கொலை; பழிக்குப்பழி சம்பவமா? – போலீஸ் விசாரணை

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(40). மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் கூலித் வேலை செய்து வந்தார். பிரபல ரெளடியான இவர் தனது பெயரை அறிக்கி என சுருக்கிக் கொண்டு பல சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்தார். இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரின் ரெளடி பட்டியலில் அறிவழகன் பெயர் இருப்பதுடன் கண்காணிக்கப்படும் குற்றவாளியாகவும் இருந்து வந்தார்.

ரெளடி அறிவழகன்

இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரை படித்துறையில் அமர்ந்து தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அறிவழகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் டி.எஸ்.பி சோமசுந்தரம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் அறிவழகன் உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் கிடைக்கிறதா என விசாரணை செய்தனர். முன்விரோதம் காரணமாக, பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாக அறிவழகனுடன் ஒன்றாக மது அருந்தியவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88