திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர இருக்கிறார்.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ஒரு பக்கம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருப்பதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. “முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை” என விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தள பதிவில்,
“1.செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்… எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?
2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்… தியாகி என்று கூறுவதற்கு?
3.INDI கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல…
4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடுமன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக…
5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை, சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்…
6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது, பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல…
7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார்… எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு…
ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை….” என்றிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88