திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்றதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை இதில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சுமார் 15 மாதங்களாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வேண்டி போராடி வந்தார்.
இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்த உச்ச நீதிமன்றம், இன்று காலை 25 லட்சம் பிணைத் தொகை உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனால், செந்தில் பாலாஜியின் தி.மு.க ஆதரவாளர்கள் புழல் சிறைக்கு வெளியே மாலையும் பட்டாசுமாக அவரின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.
மறுபக்கம், சென்னையிலுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். மேலும், இரண்டு பேர் ரூ.25 லட்சம் பிணைத் தொகை வழங்க முன்வந்தனர். அதனைச் சரிபார்த்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், ஜாமீன் உத்தரவாதங்களை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துவிட்டார்.
பின்னர், ஜாமீன் உத்தரவாதங்களை எப்படி விசாரணை அதிகாரியிடம் அளிக்க முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கேட்க, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை நேரில் வரும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அங்கு வந்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கவே, ஜாமீன் உத்தரவாதங்களை நீதிபதி ஏற்றார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88