“10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது” – AI குறித்து யுவன் சங்கர் ராஜா

கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற அக்டோபர் 12ம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா கூறுகையில்,

யுவன் சங்கர் ராஜா

“கோட் படப் பாடல்கள் குறித்து ரசிகர்களின் கருத்துகளை கவனித்தேன். அதனடிப்படையில் ரீ – ஓர்க் செய்தோம். கோட் OST விரைவில் வெளியாகும். விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பாடல் கேட்டால் இசையமைப்பேன்.

இசையமைப்பாளர்களுக்கு 5 – 10 ஆண்டுகள் தான் வேலை இருக்கும். ஏ.ஐ தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில்  இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. அந்தத் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் எங்களின் வேலை கணிசமாக குறையும். இளையராஜவின் மகன் என்பதற்காகவே, அவரின் எல்லா பாடல்களையும் ரீ – மேக் செய்ய முடியாது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். ஏ.ஐ (AI)

ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொருவரிடம் காப்பி ரைட்ஸ் இருக்கும். அவர்களிடம் பேசித்தான் ரைட்ஸ் வாங்க முடியும். இப்போது அதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அது ஆரோக்கியமான ஒன்று.

கோவையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களுடன், உள்ளூரில் உள்ள சில பாடகர்களையும் பயன்படுத்த உள்ளோம்.“ என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX