தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொன்விழா ஆண்டு நுழைவாயில், மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, “மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் உடன் கலந்து கொண்டேன். கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படாத மாணவர்களுக்காக தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினேன்.
மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்ற முதல்வரின் கருத்தை விமர்சித்து பேசிய தமிழிசையை குமரி ஆனந்தன் இல்லையென்றால் யாருக்கும் தெரியாது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் துணை முதல்வராகும் அனைத்து தகுதியும் உதயநிதிக்கு இருக்கிறது. இளமையிலேயே இயக்கத்திற்காக உழைத்த பெரியார், அண்ணா கொள்கையில் வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் இளைஞர்களின் வழிகாட்டியாக கட்டாயம் இருப்பார்.
உயர்கல்வி சுகாதாரத்தை இரு கண்களாக பார்ப்பவர் முதல்வர் ஸ்டாலின். எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதாது தரமும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb