வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதில் இருந்து மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் துரை தயாநிதிக்கு `பிசியோதெரபி’ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. தந்தை அழகிரி உட்பட குடும்பத்தினர் அருகில் இருந்து துரை தயாநிதியை கவனித்துவந்தனர்.
இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 2 முறை வேலூருக்கு வந்து துரை தயாநிதியை நலம் விசாரித்துச் சென்றார். தொடர் சிகிச்சையின் காரணமாக துரை தயாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, தந்தை மு.க.அழகிரியுடன் வீடு திரும்பினார் துரை தயாநிதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb