‘காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
இன்று காலையிலிருந்து சீசிங் ராஜா என்கவுன்ட்டர் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதைப்பற்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது,
“என்கவுன்ட்டர்கள் தொடர்ந்து நடந்து வருவதை, ஒரு வழக்கறிஞராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமும், நீதிமன்றமும் எதற்கு இருக்கிறது? ஒருவர் குற்றவாளி என்று முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம்தான். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டியதுதான் காவல்துறையின் பொறுப்பு. ஒருவரை சட்டத்தின் முன் நிறுத்தி, அவரின் குற்றத்தை நிரூபிக்கும் வரை அவர் குற்றம்சாட்டப்பட்டவர் தான்… குற்றவாளி அல்ல. சட்டத்தை காவல்துறை கையில் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனக் கூறினார்.