தற்போதைய அரசு 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு 48% நகர மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவு நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இதனால், அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக உலக முதலீட்டார்களும் கருதுகிறார்கள்.
அதன்படி, உலகின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் அரசுப் பயணமாக 14 நாட்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளார். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் வாயிலாக 18 ஆயிரத்து 521 நபருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த அமெரிக்க பயணத்தில் தமிழக முதல்வர் 25 முன்னணி நிறுவனங்களுடன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். இதில், 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்களும் ஆகும். இந்த சந்திப்புகளில் இருந்து 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் 9 சந்திப்புகள் நடைபெற்று, அதில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருகிறது. இதன்மூலம் தமிழக இளைஞர்கள் 4,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
சிகாகோவில் 16 சந்திப்புகள் நடைபெற்று, அதில் 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதன்மூலம் தமிழக இளைஞர்கள் 6,916 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 616 கோடி முதலீடானது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.
இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக இம்முறை மதுரை போன்ற தென்மாவட்டங்களும் அந்நிய முதலீட்டு பார்வையில் உள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைக்கோர்த்த நிறுவனங்கள்…
தரவு: தமிழ்நாடு அரசு இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9.