பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம். இந்த முடிவு பொத்தம் பொதுவாக எடுக்கப்படவில்லை.
முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக சொல்லுகிறார்கள். அதேநேரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் இதை ஏன் கண்டுகொள்ளவில்லை.
அமைச்சர் அன்பில் மகேஸ் பகுதியில், அரசு கொடுக்கும் முட்டைகளை வெளிக் கடைகளில் விற்பது அதிர்ச்சியளிக்கிறது. மகா விஷ்ணுவை கைது செய்ததை போல, முட்டை தூக்கி சென்றவர்களை எப்போது கைது செய்வீர்கள். உதயநிதி துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என்று திடீர் வதந்தி பரவுகிறது.
நல்ல நாள் இல்லாத காரணத்தால் பதவி ஏற்க மாட்டார்கள். காரணம் இவர்கள் பகுத்தறிவாளர்கள். உதயநிதி பதவி ஏற்கும் நாள் சுப முகூர்த்த நாளாக தான் இருக்கும்.
கூட்டணி பிரச்னை காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் மாநாடு நடத்துகிறார். திருமாவளவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. நான் எதும் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சரை பார்த்து திருமாவளவன் பயந்துள்ளார். பாஜகவில் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்து பரவி வருகிறது. நடிகர் விஜய் ஒற்றை சாயம் பூசி செல்லக் கூடாது. விஜய் பொதுவான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY