சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. பல குற்றங்களைச் செய்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். இந்நிலையில் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள BSNL குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போலீசார் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்திருக்கிறார். அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.