Seeman: “உதயநிதி தெரிந்த கதைதான்; அடுத்து இன்பநிதி; இதுதான் கொடிய சனாதனம்” – சீமான் காட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு வெளிவரலாம் என்ற தகவலும், விஜய் பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியதும் இன்று தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “இன்னும் ஏன் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” எனப் பேசியிருந்தது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. இதையடுத்து இன்று அல்லது விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்ற பேச்சுகள் அரசியல் வட்டராத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

உதயநிதி, விஜய்

இதுகுறித்து பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், “கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அடுத்தது இன்பநிதி என தலைமுறைத் தலைமுறைகளாக வாரிசுகள் ‘திமுக’வின் தலைவராவதும், முதலமைச்சராவதும்தான் சனாதனம். பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரது ஓட்டையும் விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் மூலம் கூட்டணி அமைத்து வைத்து வாங்கிவிட்டு இவர்களின் வாரிசுகள் மட்டும் முதலமைச்சராவதுதான் கொடிய சனாதனம். சமூக நீதி, சனாதன ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள், இதைவிடக் கொடிய சனாதனம் எங்கும் இருக்காது.

உதயநிதி துணை முதல்வராவது, பிறகு முதல்வராவது எல்லாம் தெரிந்த கதைதான். சும்மா இன்று ‘புலி வருது, புலி வருது’ கதை சொல்லி வருகிறார்கள். அடுத்து இன்பநிதியை முதல்வராக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கொத்தடிமைகள்” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

சீமான்

விஜய் பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறித்துப் பேசியவர், “விஜய் தம்பி அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறோம். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திருவிக உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும். பெத்தவன் ஒருத்தனாக இருக்க வேண்டும், தலைவன் எங்கள் இரத்ததில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.

பெரியார் எங்களுக்கு என்றும் வழிகாட்டிதான். அவரை தமிழ் தேசிய இனத்தின் எதிரியாகப் பார்க்கவில்லை. அதேபோல் தமிழ் தேசிய இனத்தின் தலைவராகவும் ஏற்கவில்லை. சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை, தீண்டாமைக்கு எதிராகப் பெரியாரும் போராடினார் என்பதை ஏற்கிறோம். பெரியார் மட்டும்தான் போராடினார் என்பதை எதிர்க்கிறோம். இதுதான் நாம் தமிழர் கட்சியின் உறுதியான நிலைப்பாடு” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY