Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா?

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-

மின்தடை

சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

*ஆயிரம் விளக்கு,

*மேடவாக்கம்,

*திருவொற்றியூர்

*மாங்காடு

*திருமங்கலம்

ஆகிய பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்தடை இருக்கும்.