திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.
கடந்த 1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது வலுவாக அப்போது இது கூறப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம். அதே நேரத்தில் என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும்.
இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. முழுப் பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால், ஆட்சியில், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.
மது ஒழிப்பைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். மதுவில்லா தமிழகம் என்று மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY