லிப்ட் கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள்… தஞ்சையில் அதிர்ச்சி..!

தஞ்சாவூர் அருகே 45 வயதான திருமணமான பெண். கடந்த 3-ம் தேதி இரவு பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். பஸ் நீண்ட நேரமாக வரவில்லை. இந்நிலையில் அந்தவழியாக ராயந்துாரை சேர்ந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) இருவரும் தனி தனி டூவீலரில் வந்துள்ளனர்.

காத்திருந்த பெண்ணிடம் பஸ் வர தாமதமாகும், அந்த பகுதியை தாண்டித்தான் செல்கிறோம் என்று பேச்சு கொடுத்துள்ளனர். அவர்கள் சொன்னதை நம்பி, லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து பீரவீன் தன் டூவீலரில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு செல்ல ராஜ்கபூர் அவரை பின் தொடர்ந்துள்ளார்.

பாலியல் புகார்

இந்நிலையில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குச் சென்றதும் வண்டியை நிறுத்தி விட்டு அந்த பெண்ணின் வாயைப்பொத்தி பிரவீனும், ராஜ்கபூரும் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல திமிறியிருக்கிறார் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பெண்ணை தாக்கி விட்டு இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக சொன்ன அம்மா, ரொம்ப நேரமாக வராததால் பயந்து போன அவரது மகள் தம்பியிடம் பார்த்து வரச்சொல்லியுள்ளார். அவரும் தேடிச் சென்ற நிலையில், தன் அம்மா சாலையோரத்தில் அழுதுக்கொண்டு நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது பிரவீன், ராஜ்கபூர் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

crime

ஏம்மா, என்னாச்சு அழறீங்க என்று பதறித்துடித்து கேட்டவரிடம் கதறியிருக்கிறார். இதையடுத்து தன் மகளிடம் அந்த பெண் நடந்ததை சொல்லியிருக்கிறார். பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பூதலுார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்தனர்.