சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; முதலமைச்சர் கண்டனம்
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sitaram Yechury: சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி, சுவாசப் பிரச்னையின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு) அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.