ரிசர்வ் வங்கி வீட்டு விலைக் குறியீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் வீடுகளின் விலை 9.2% (CAGR) வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், சென்னையில் வீடுகளின் விலை 8.8% உயர்ந்துள்ளது.
உதாரணமாக, 2011-ம் ஆண்டில் சென்னையில் ஒரு வீட்டின் விலை 50 லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் மதிப்பு 13 ஆண்டுகளில் 8.8% உயருகிறது எனில், தற்போது அந்த வீட்டின் மதிப்பு சுமார் 1.43 கோடி ரூபாய்.
மற்ற நகரங்களில் வீடுகளின் விலை வளர்ச்சி..
பெங்களூரு : 10.1%
கொச்சி : 9.7%
மும்பை : 8.7%
அஹமதாபாத் : 9.7%
கொல்கத்தா : 9.4%
டெல்லி : 10%
ஜெய்ப்பூர் : 4.4%
லக்னோ : 11%
பெங்களூருவை எடுத்துக்கொண்டால், 2011-ம் ஆண்டில் ஒரு வீட்டின் விலை 50 லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் மதிப்பு 10.1% வளர்ந்தால், இப்போது சுமார் 1.62 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.