வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 24 குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்கியதனால் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் புதின்.
புதின் வழங்கிய வெள்ளை குதிரைகள் ஆர்லோவ் ட்ரோட்டெர் இனத்தைச் சேர்ந்தவை. இது கொரிய அதிபருக்கு பிடித்த இனமாகும். அரிய வகை குதிரைகளான இவை ரஷ்யாவைச் சேர்ந்தவை. இதன் வேகம் (மணிக்கு 45 கிலோமீட்டர் வரை), ஆற்றல், விவேகம், அழகுக்காக சிறப்பை கொண்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேப்போல 30 குதிரைகள் கொரிய அதிபருக்கு வழங்கப்பட்டன. வடகொரியாவின் அழகிய பேக்டு மலையில் பனிப் பொழிவின் இடையே வெள்ளை குதிரையில் கிம் ஜாங் உன் சவாரி செய்வதுபோன்ற புகைப்படத்தை அரசு ஊடகம் வெளியிட்டது.
வட கொரிய புராணங்களில் சிறகுகள் கொண்ட குதிரைகளான் சோலிமா(Chollima) புகழ்பெற்றது. குதிரைகளை அடையாளமாகப் பயன்படுத்துவதில் கிம் குடும்பத்தினருக்கு தனித்த பாரம்பரியம் இருக்கிறது. கொரிய போருக்குப் பிறகு இழந்த பொருளாதாரத்தை மீட்கும் இயக்கத்துக்கு சோலிமா எனப் பெயரிட்டனர். வட கொரியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைக்கும் சோலிமா எனப் பெயர் வைத்திருக்கின்றனர்.
வெள்ளை ஸ்டாலியனில் (இளம் ஆண் குதிரை) கிம் அமர்ந்திருப்பது அவரது அதிகாரத்தையும், வல்லமையையும் நிலைநாட்டுவதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் ரஷ்யா – வடகொரியா ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது புதினுக்கு அன்பளிப்பாக புங்சன் நாய்களை வழங்கினார் கிம். இதற்கு பதிலாக 447 ஆடுகளை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்தார் புதின்.
அமெரிக்காவின் எதிராளிகளான இரண்டு அதிபர்களும் விலங்குகளைப் பகிர்ந்துகொள்வது, இரு நாட்டுக்குமான உறவின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88