கோவையில் உள்ள திரையரங்குக்கு, சமீபத்தில் வெளியாகியிருக்கும் `வாழை’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மக்களுடன் சேர்ந்து வாழை திரைப்படத்தைப் பார்த்தார்.
படம் முடிந்த பிறகு அவர் பேசுகையில், “எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஏனா இந்த மாதிரி எளிய மனிதனோட கதை; அதை நிஜமா எடுக்கப்பட்டால் கொண்டாடப்படும்னு, தமிழ் சினிமா வரலாற்றில நீங்க பொன் எழுத்துகளால குறிச்சிருக்கீங்க. உங்க உணர்வுகளின் வழியாக வாழை அப்டிங்கற படத்தின் மூலமாக நிஜங்களைத் தேடக் கூடிய, ஒரு கதையை தேடும் ஒரு சூழல் உருவாகியிருக்கு.

நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களை நம்பி எடுக்கப்பட்ட ஒரு படம். எனக்கு இந்த படத்தோட முதல் பாதி (first half) எடுக்கும் போது தோணுச்சு, கடைசியில ஆடியன்ஸ் ஓட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு… என் அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ் எல்லாம் சொன்னாங்க உங்க பெயரை முதல்ல போடுங்க, லாஸ்ட்ல போட்டா கை தட்ட மாட்டாங்கனு. என் பெயர் வரும் போது எல்லாரும் அமைதியா இருந்தா, அது தான் என்னோட பெரிய வெற்றினு அன்னைக்கு சொன்னேன்.
நாம சொல்ற கதைல எவ்வளவு விஷயம் இருந்தாலும் கூட அந்த கதைல ஏதாவது இத்துநூண்டு நிஜமாவது நம்ம பார்வையாளர்களுக்கு கடத்திட முடியுமா அப்படிங்கறது மட்டும் தான் என்னோட நோக்கமா இருக்கும். அந்த நிஜத்தை எடுத்துக் கொண்டாடிய அத்தனை மக்களுக்கும் என்னோட டீம் சார்பாகவும் என்னோட நன்றி. நான் இப்போது தான் முதல் தடவையா முழு படம் பார்க்கிறேன்.

என்னோட ஃபேமிலி பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னு சொன்னாங்க, அப்போ எனக்கு தோணுச்சு பெரிய ஸ்க்ரீன்ல இதை தாங்கக் கூடிய சக்தி நமக்கு இருக்கானு தோணுச்சு. ஆனால் உங்களோட அமைதியும் அன்பும் இந்த ஷோவ பார்க்க வெச்சுது. என் வாழ்க்கையில இந்த ஷோவ மறக்க மாட்டேன்” எனக் கூறி நெகிழ்ந்தார்.
மேலும் அவருடன் அப்படத்தின் நாயகர்களாக நடித்திருந்த சிறுவர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41