ஆந்திரா, தெலங்கானாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்த மாநிலங்களில் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேலும் இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி, 27 பேர் இந்த பெரு மழையில் உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் ரயில்களை இயக்க முடியாது என்பதால் மத்திய தெற்கு ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ அலெர்ட் வழங்கியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றப்பட்டும் இருக்கிறது. அதன் விவரங்கள்…
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
சென்னை சென்டரலில் இருந்து புறப்படும்
சென்னை-நிஜாமுதீன் ரயில்(12269)
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12842)
நவஜீவன் எக்ஸ்பிரஸ்(12656)
சென்னை-பிலாஸ்பூர்(12852)
கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ்(12669)
கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்(12615)
சென்னை-புது தில்லி(12621)
திருவனந்தபுரம்-கோர்பா(22648)
பூரி-சென்னை(22859)
எக்மோரில் இருந்து புறப்படும்
தாம்பரம்-ஹைதராபாத்(12759)
பெரம்பூரில் இருந்து புறப்படும்
சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்(12295)
பெங்களூரு-தன்பூர்(06509)
ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள்:
சென்னை சென்டரலில் இருந்து புறப்படும்
ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்(12511)
எக்மோரில் இருந்து புறப்படும்
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(20498)
ஷ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ்(22613)
மன்னார்குடி எக்ஸ்பிரஸ்(22674)
பெரம்பூரில் இருந்து புறப்படும்
மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ்(12687)
சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்(12296)
ஆகிய ரயில்கள் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளன.