திருச்சி என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிள் என 6000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அப்படி பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வியை கற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று என்.ஐ.டி-யில் உள்ள OPEL மகளிர் விடுதியில் மின்சார பிரச்னையை சரி செய்ய வந்த என்.ஐ.டி-யில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் அங்கிருந்த மாணவி ஒருவர் முன்னிலையில் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இச்சம்பவம் குறித்து சக மாணவ, மாணவிகளிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து என்.ஐ.டி நிர்வாகத்திடமும், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து என்.ஐ.டி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது அவர்கள் மாணவிகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், விடுதி காப்பாளர் மாணவிகள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அதனை கண்டித்து என்.ஐ.டி மாணவ, மாணவிகள் விடுதியின் முன் திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை விமர்சித்த விடுதி வார்டனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும், இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்துவதால், இன்று காலை என்.ஐ.டி நிர்வாகம் பேச்சுவார்த்தை அழைத்துள்ளனர். என்.ஐ.டி கல்லூரி மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் ஆபாச செய்கை மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88