`மூச்சுமுட்ட சாப்பிட்டபோது மகனின் முகம்தான் தெரிந்தது’ – மகனுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை உருக்கம்

கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கேரளாவைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் பிரியாணி சாப்பிடும்போட்டியை அந்த ஹோட்டல் நிர்வாகம் நேற்று கோவையில் நடத்தி இருந்தது. இதில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 2வது பரிசாக ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 3வது பரிசாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

கணேச மூர்த்தி

இந்த பிரியாணி சாப்பிடும் போட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் அதில் இரண்டாம் இடம் பிடித்த கணேஷ மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் பங்கேற்றிருந்ததுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தனது மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் பங்கேற்றிருந்த அவர் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு, அதன் பின்னர் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

அது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் எமோஷனலாகச் செய்திருந்தது. இந்நிலையில் கணேஷ மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசினோம். “முதலில் தூத்துக்குடியில்தான் நாங்கள் இருந்தோம். மகனின் சிகிச்சைகாகதான் இப்போது கோவையில் குடும்பத்தோடு தங்கியுள்ளோம். மகனின் சிகிச்சைகாக இரவு பகல் பார்க்காமல் டிரைவர் வேலை செய்து வருகிறேன்.

கணேச மூர்த்தியின் குடும்பம்

ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனின் மருத்துவ தேவைக்காகதான் போட்டியில் பங்கேற்றேன். மூச்சு முட்ட பிரியாணி சாப்பிடும் போது மகனின் முகம் தான் தெரிந்தது. இரண்டாம் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. இந்த செய்தியை அறிந்த சிலர் எங்களுக்கு அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88