அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திமுகவை பற்றி பேசினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை.
எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிட்டதில் மத்திய அரசுக்கு தான் பெருமை. அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்து விடுகிறது. பயப்பட கூடியவர்கள்தான் பதற்றமடைவார்கள்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும்போது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் ‘அண்ணா அண்ணா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை. மானமுள்ள விவசாயி மகன் என்றால் 2021ம் ஆண்டு எடப்பாடியார் பின்னால் நின்ற அண்ணாமலை எங்கே போனார்.
திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலை ரகசியமாக சந்தித்தார். மேலும் DMK Files என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார்.
ஐபிஎஸ் பணியில் இருக்கும் போது எப்படி எத்தனை சொத்துக்கள் வந்தது. கவுன்சிலர் ஆவதற்கு கூட துப்பில்லாதவருக்கே இத்தனை சொத்துக்கள் என்றால் பதவி வந்தால் என்ன ஆகும். உண்மையான ஆண்மகன் என்றால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்.
அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை. அவர் YouTube Influencer. முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88