நாய்களை மரத்தில் தொங்கவிட்டு அடித்துக் கொன்ற கொடூரம்; 20 பேர் மீது வழக்குப் பதிவு – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ளது முளையாம்பூண்டி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கோயில் மேட்டுப்புதூர் என்ற பகுதியில் இரண்டு நாய்களை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, சிலர் அதை கட்டையால் தாக்குகின்றனர்.வலியால் அலறித் துடித்து நாய்கள் உயிரிழக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினர் கூறுகையில், “முளையாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த கிட்டுச்சாமி என்பவர் வளர்த்தி வரும் நாயும், மற்றொரு தெரு நாயும் ஆடுகளைப் பிடிப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், நடராஜ், கந்தசாமி, பன்னீர் உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து இந்த இரண்டு நாய்களையும் பிடித்து மரத்தில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். பின்னர், மரக்கட்டை மூலம் அந்த இரண்டு நாய்களின் உயிர் பிரியும் வரை அடித்தே கொன்றுள்ளனர்.

நாய்கள்

ஆடுகளைப் பிடிப்பதாக எங்களிடமோ அல்லது ஊராட்சி நிர்வாகத்திடமோ தெரிவித்திருந்தால், அந்த நாய்களைப் பிடித்து வளர்ப்பு முகாமுக்கு அனுப்பி இருப்போம். இவ்வாறு மரத்தில் கட்டித் வைத்து அடித்துக் கொல்வது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், நாய்களை அடித்துக் கொன்றதாக 20 பேர் மீது மூலனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88