கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது சட்ட விரோதமானது. கோவை மாநகரில் கடந்த 3 நாள்களில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கிய 126 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்பட மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கெனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி பார்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள், மது அருந்திவிட்டு திரும்ப செல்லும்போது, அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்களில் மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால், அவர் டிரைவருடன் வருவதை உறுதிசெய்ய வேண்டும்.
டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதற்கு தேவையான டிரைவருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும். இல்லையென்றால் நம்பகத்தன்மை உள்ள டிரைவர் ஒருவரை ஏற்பாடு செய்து, அவரின் சொந்த வாகனத்திலேயே அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கான ஏற்பாட்டை பார் நிர்வாகம் செய்ய வேண்டும்.
மேலும், பார்களுக்கு வருவோர் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். பாரின் உள்புறம் வெளிப்புறம், வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்.
இதை கடைபிடிக்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட பார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பாரின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88