நினைத்த காரியங்களை உடனே நிறைவேற்றித் தரும் ஸ்ரீவராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம்! சங்கல்பியுங்கள்!

ஜகன்மாதா ஸ்ரீலலிதாவின் தளபதியாக விளங்குபவள் ஸ்ரீவராஹி. ரத்த பீஜன் என்கிற அசுரனுடன் மகாதுர்கை தேவி போரிட்ட பொழுது, தனது மகா சக்தியை ஏழு சக்திகளாகப் பிரித்து, ஏழு சப்த கன்னியர்களை தோற்றுவித்து, அவர்களை ரத்த பீஜனுடன் போர் செய்ய அனுப்பினாள். அதில் எதிரிகளுக்கு அச்சமூட்டும் வராஹ வடிவம் கொண்டவளே இந்த அன்னை.

ஸ்ரீலலிதா தாருகாசுரனை வதம் செய்தபோது அவளுக்குத் துணை நின்றவள் ஸ்ரீவராஹி. சும்பாசுரனோடு ஸ்ரீதுர்கை போர் புரிந்த போதும் உதவியவள் வராஹி. எலும்புக்கும் நரம்புக்கும் அதிதேவதையான ஸ்ரீவராஹி, வாதம், பித்தம், கபத்தைக் கட்டுப்படுத்துபவள். மயில் தோகையால் விசிறி, வெண்ணெய்யும், முறுக்கும், வெள்ளரிக்காயும் நைவேத்தியம் செய்து ஸ்ரீவாராஹிக்கு படைத்தால் வேண்டியது கிடைக்கும். வேதனைகள் தீரும்.தேய்பிறை பஞ்சமி தினத்தன்று ஸ்ரீவராஹி ஹோமம் செய்தால் வேண்டிய வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.

பன்றியின் தலையும், தெய்வீகப் பெண் உடலும் கொண்ட வடிவமான வராஹி அம்மன் கருப்பு நிற ஆடை அணிந்து, சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். 8 திருக்கரங்களில் ஏர்கலப்பை, சூலம், ஸ்ரீசக்கரம், கதாயுதம், சங்கு, அங்குசம், மற்றும் அபய வரத முத்திரைகளுடன் திகழ்வாள். இவளை வழிபட்டால் வாழ்வில் துன்பமே இல்லை என்பது நம்பிக்கை.

தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பயத்தைப் போக்குவதில் இவளுக்கு இணையான தேவி இல்லை. பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி ஸ்ரீராஜராஜேஸ்வரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் வாராஹியே தலைமையேற்று விஷூக்ரன் எனும் அசுரனை மாய்த்தாள் என லலிதோபாக்யானம் கூறுகிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராண ஹரண வாராஹி’ என்று பல நாமங்களில் இவளைப் போற்றுகிறது. அன்னை ராஜராஜேஸ்வரியின் மனம் அறிந்து இவள் ரதத்தைச் செலுத்துவதால் ‘சங்கேதா, கோலாம்பா, வீர்யவதி’ என்றும் போற்றப்படுகிறாள்.

உன்மத்த பைரவி, திரஷ் கரிணி, கிரிபதா, உவந்ததா ஸ்வப்னேசி என்ற ஐவரும் வராஹியின் பரிவார தேவதைகள். பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனைக் கிழங்கு, உருளைக் கிழங்கு, பூண்டு, வெங்காயம் இவளுக்குப் பிடித்தமான படையல்கள். காசி வராஹி, உத்திரகோச மங்கை மங்கைப்பிடாரி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதி கோஷ்ட வராஹி, பள்ளூர் வராஹி, தஞ்சை பெரிய கோயில் வராஹி என்று பல விசேஷ கோயில்கள் இவளுக்கு உண்டு. இதைப்போலவே தாராபுரம் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மனும் மிக விசேஷமானவள்.

பிரத்யட்ச வராஹி என பக்தர்களால் போற்றப்படும் இவள், பக்தர்கள் வேண்டுவதை அவர்கள் கனவில் பிரத்யட்சமாகத் தோன்றி நிறைவேற்றித் தருபவள் என்கிறார்கள். கருணை வடிவமான இந்த தேவிக்கு இங்கு செவ்வாய், ஞாயிறு ராகு கால பூஜைகள் விசேஷம். இந்த ஆலயத்தில் காலை கணபதி ஹோமம், புஷ்பாஞ்சலி, ஆரத்தி போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குள்ள பாலகணபதி பால திரிபுர சுந்தரி, உன்மத்த பைரவர், காமாக்யா தேவி வடிவங்களும் சிறப்பானவை. வளர்பிறை பஞ்சமி அன்று காலை வராஹி தேவிக்கு சிறப்பு பூஜைகளும், தேய்பிறை பஞ்சமி நாளில் இரவு ஹோம வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

உன்மத்த பைரவர்

காமாக்யா தேவிக்கு இங்கு குருதி பூஜை நடைபெறுகின்றது. இங்குள்ள 20 அடி உயர திரிசூலம் அச்சத்தை நீக்குவது. சக்தி விகடன் வாசகர்கள் நலமும் வளமும் பெற 2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீசக்ர வராஹியாக அன்னை இங்கே வீற்றிருந்து பல்வேறு சித்துக்களை செய்து பக்தர்களைக் காத்து வருகிறாள். எனவே இங்கு ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத கடன்கள் தீரும்; வாட்டும் வியாதிகள் நீங்கும்; மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வம்பு வழக்குகளிலிருந்து விடுபட, திருஷ்டி, தோஷம், அச்சம் விலகிட வராஹி வழிபாடு அவசியம். பஞ்சமி, தண்டநாதா, சமயேஸ்வரி, ஸமய ஸங்கேதா, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமங்களால் துதித்தால் மகிழ்வாள் என்கின்றன சாஸ்திரங்கள். வராஹி மாலை, நிக்ரகாஷ்டகம், அனுக்ரகாஷ்டகம், வாராஹி அஷ்டோத்ரம், வாராஹி ஸஹஸ்ரநாமாவளி போன்ற துதிப் பாடல்களை இவளை வழிபட நன்மைகள் உருவாகும்.

QR Code for Sri Mahalakshmi Homam Registration:

QR Code for Sri Mahalakshmi Homam Registration

சகல நன்மைகளையும் அருளும் இந்த ஸ்ரீவராஹி ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். யம பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். வீண் அச்சங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.