TVK Vijay: `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்!’ – விஜய்

தமிழ் திரைப்பட நடிகர் விஜய், கடந்த மார்ச்சில் `தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர். இவ்வாறிருக்க, ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்’ என கொடி அறிமுகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88