“தமிழகத்துக்கு எதுவும் தராத பாஜக-வுடன் நெருக்கமா?” – கனிமொழி சொன்ன விளக்கம்

சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரனின் 253-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரின்  மணி மண்டபத்தில் உள்ள முழு உருவச் சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கனிமொழி

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில்தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும், அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் நடக்கும் ஆட்சி, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த ஆட்சியின் குறிக்கோள். மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளுக்காக தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி போன்றவை வரவில்லை.

கனிமொழி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதல்வரால் கேட்கப்பட்டும் அது கிடைக்கப் பெறவில்லை. இப்படி எதுவும் கிடைக்காத நிலையில்  மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? பா.ஜ.க உடனான தி. மு.கவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அனைவருடனும் பழகும் போது எளிமையாக பழகக்கூடியவர் நம் முதல்வர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் போது உறுதியாக இருப்பார்.” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88