ட்ரோன் ஆபரேட்டர்கள் கவனத்துக்கு..! – ஃபைனல் வார்னிங் கொடுத்த கோவை போலீஸ்

விவசாயம் தொடங்கி பாதுகாப்புத்துறை வரை துறைகளில் ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில் ட்ரோன் கேமராக்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்திலும் ட்ரோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கோவை

இதை முறையாக கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, கோவை மாநகர காவல்துறை ட்ரோன் ஆபரேட்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் சுமார் 100 ட்ரோன் ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய காவல்துறை, “கோவையில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட  ட்ரோன்கள் இயங்குவதாக தகவல் உள்ளது. ஆனால், மத்திய விமான போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் ஸ்கை தளத்தில் 57 ட்ரோன் ஆபரேட்டர்கள் தான் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

ட்ரோன்

இனி பதிவு செய்யாமல் ட்ரோன் இயக்குவோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கலாம் என்றும் விமான போக்குவரத்துத் துறை சொல்லியுள்ளது.

நாங்கள் ‘ஆன்டி ட்ரோன் கன்’ வாங்கப் போகிறோம். 5 கி.மீ சுற்றளவில் அனுமதியில்லாமல் எங்கு ட்ரோன் இயக்கினாலும், இந்தத் தொழில்நுட்பம் உங்கள்  ட்ரோனை எங்களிடம் கொண்டு வந்துவிடும். நாங்கள் வழக்குப்பதிவு செய்து, ட்ரோனை  செயலிழக்க செய்துவிடுவோம்.

கோவை

முறைப்படி ட்ரோன் பைலட்டுக்கான உரிமம் வாங்கி, டிஜிட்டல் ஸ்கை தளத்தில் பதிவு செய்துவிட்டு ட்ரோன் இயக்கலாம். அதுவும் க்ரீன் ஜோனில் மட்டுமே இயக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ரெட் ஜோனில் இயக்க அனுமதி இல்லை.

பைலட் லைசென்ஸ் போலியாக எடுத்தாலும், அதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். அதனால் அண்ணா பல்கலைக்கழகம்,  வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து லைசென்ஸ் பெற வேண்டும்.

கோவை

எப்படி இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்க லைசென்ஸ் தேவையோ, அதேபோல ட்ரோன் இயக்குவதற்கும் இனி லைசென்ஸ் கட்டாயம். கோவை மிகவும் சென்ஸிட்டிவான பகுதி. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88