கோவை டு சிம்லா; தலைமறைவான ரெளடிகள்… விரட்டி பிடித்த போலீஸ் – தப்பிக்கும்போது கால் எலும்பு முறிவு!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படித்து வரும் மாணவர்கள் வெற்றிவேல், பிரவீன் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் இருந்தது. இந்தப் பிரச்னை கட்டப்பஞ்சாயத்தாக மாறியது. பிரவீன் தரப்புக்கு ஆதரவாக அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் தீபக் என்பவர், ரவீந்திரா என்ற ரெளடி, அவரின் கூட்டாளிகள் இறங்கியுள்ளனர்.

ரவீந்திரா
நந்தக்குமார்
சிராஜுதீன்

இவர்கள் அனைவரும் இணைந்து வெற்றிவேல் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து, அவரை தாக்கிவிட்டு உடைமைகளை எடுத்து சென்றதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே 6  பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரெளடி ரவீந்திரா, நந்தகுமார் மற்றும் சிராஜுதீன் ஆகிய மூன்று பேர் தலைமறைவானார்கள்.

அவர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.  கோவையில் பல ரெளடி கேங்குகள் உள்ளன. அதில் காமராஜபுரம் கௌதம், ரத்தினபுரியைச் சேர்ந்த ஒன்றரை கௌதம் டீமுக்கு பகை இருந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒன்றரை கௌதம் டீமைச் சேர்ந்த குரங்கு ஶ்ரீராம் என்ற ரெளடி கொலை செய்யப்பட்டார்.

கோவை கொலை

காமராஜபுரம் கௌதம் டீமுக்கு ரவீந்தரா, நந்தக்குமார், சிராஜுதீன், கோகுல் ஆகியோருக்கு  தொடர்புள்ளது. இதனிடையே  ஶ்ரீராம் கொலைக்கு பழிவாங்கும் விதமாக, கடந்தாண்டு கோகுலை  கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒன்றரை கௌதம் டீம் வெட்டி கொலை  செய்தது.

இதில் ஆத்திரமடைந்த ரவீந்திரா உள்ளிட்ட கௌதம் டீம் கோகுல் கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டிருந்தனர். அதற்குள் கல்லூரி கட்டப்பஞ்சாயத்து வழக்கில் சிக்கிவிட்டதால் 3 ரெளடிகளும் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் , சிம்லாவில் தலைமறைவாகியுள்ளனர். கோவை போலீஸ் சிம்லா விரைந்து 3 பேரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதனிடையே அவர்கள் தங்கள் ஆயுதங்களை குரும்பபாளையம் அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

ரவீந்திரா
நந்தக்குமார்

இதையடுத்து போலீஸார் ரவீந்திரா மற்றும் நந்தக்குமாரை அங்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்று அருகில் உள்ள பள்ளத்தில் இருவரும் குதித்து, இரண்டு பேருக்கும் கால் எலும்பு முறிந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88