முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என தமிழகம் கோரிக்கைவிடுத்துவரும் நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரளம் வாதிட்டுவருகிறது. முல்லை பெரியார் அணையை மையமாகக்கொண்டு தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும் எனக்கோரி ஜனகீய கூட்டாய்ம என்ற அமைப்பு, ஒருநாள் உண்ணாவிரதம், சர்வமத பிரார்த்தனை என போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இதற்கிடையே, முல்லைப் பெரியாரில் புதிய அணை வேண்டும் என்பது ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கோரிக்கையாக உள்ளது என கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டி சுதந்திரதினவிழாவில் பேசியிருந்தார். இதற்கிடையே முல்லைப் பெரியார் அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு என நடிகரும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி முல்லைப்பெரியாறு அணை குறித்து பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசுகையில், “இதயத்தில் இடிமுழக்கம்போன்று பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது முல்லைப் பெரியார் அணைக்கட்டு. முல்லைப் பெரியார் அணை உடையலாம், உடையாமலும் இருக்கலாம். ஒருவேளை உடைந்தால். அதற்கு யார் பதில் சொல்வார்கள். கோர்ட் பதில்சொல்லுமா? கோர்ட்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை பெற்று அதை செயல்படுத்துபவர்கள் அதற்கான பதிலை சொல்லவேண்டும். நமக்கு இனி கண்ணீரில் மூழ்க முடியாது” என்றார்.
முல்லைப்பெரியார் அணை உறுதியாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தமிழகம் கூறிவருகிறது. நீதிமன்ற உத்தரவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதேசமயம் முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளாவில் இருந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுந்து வருகிறது. அதே பாணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88